கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் மற்றும் கடமைகள்

பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581. நாள்: 3-4-1987-இல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.

 
  1. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
  2. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
  3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
  4. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
  5. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
  6. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பீடு செய்யும்போது உதவி செய்தல்.
  7. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
  8. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
  9. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
  10. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
  11. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
  12. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.
  13. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
  14. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
  15. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
  16. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
  17. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.

    இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள்  கீழ்க்கண்ட பணிகளும் செய்ய கடமைப்பட்டவர்களாவார்கள்.
  18. கிராம பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது.
  19. நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல்  அலுவலகர்களுக்குத் தெரிவித்து உடனடி  நடவடிக்கை எடுப்பது.
  20. சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன     கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புதல்.
  21. கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள்  குறித்தான அறிக்கை அனுப்புதல்.
  22. குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையையும் தெரிவிப்பது.
  23. வருவாய்த்துறை அலுவலகர்களுக்கும் மற்ற துறை அலுவலகர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.
  24. சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்ட - ஒழுங்கு பேணுதற்காகக் கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
  25. கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
  26. தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் செய்வது.
  27. கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்.
  28. அரசு அவ்வப்போது தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
  29. மனு நீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாட்சியருடன் ஒத்துழைத்தல், நிலப் பட்டா / வீட்டுமனைப் பட்டா / முதியோர் உதவித் தொகை வழங்குதல் / மனுக்கள் மீது அறிக்கை அனுப்ப உரிய ஆவணங்களைத் தயாரித்தல்.
  30. பாசன ஆதாரங்களைக் கண்காணித்தல் - ஏரிகளிலும் நீர்வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது - அவற்றை முறையாகப் பராமரித்தல்.
  31. கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள் (Sale Statistic Register) எடுத்து ஒரு பதிவேடு நாளது வரை பராமரித்தல்.
  32. பதிவு மாற்றம் (Transfer of Registry) அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாளது வரையில் பராமரித்தல்.
  33. நிலப் பதிவேடுகளைக் கணினி மயமாக்குதலுக்குண்டான  (Computerisation) பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
  34. அரசு ஆணை எண் 212, வருவாய்த் துறை, தமிழ்நாடு 29-4-1999-இன் படி நாட்குறிப்பு பராமரித்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
  35. கிராம அளவில் கடன் பதிவேடு (Loan Ledgers) மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்து இது சம்பந்தமாகக் காலாண்டுக்கு ஒருமுறை வட்ட கணக்குகளுடன் சரிபார்த்தல்.
  36. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
  37. உயர் அலுவலர்கள் அவ்வப்போது இடும் பணிகளைச் செய்வது.

1 கருத்து: