#அகராதி

அகரம் + ஆதி = அகராதி
ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

நிகண்டுகள்:

தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி:

திருமூலரின் திருமந்திரத்தில் "அகராதி" என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

அகராதி நிகண்டு:

நிகண்டுகளில் ஒன்றான "அகராதி நிகண்டில்" அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

சதுரகராதி:

வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
இது கி.பி.1732 ஆம் ஆண்டு வெளிவந்தது.
சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியான பொருள் விளக்கம் இருந்தது.
வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.

சங்க அகராதி:

"தமிழ்-தமிழ் அகராதி" ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

பிற அகரமுதலிகள்:

குப்புசாமி என்பவர் "தமிழ்ப் பேரகராதி" வெளியிட்டார்.
இராமநாதன் எனபவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார்.
இந்நூல் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி" எனும் பெயருடன் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக