# வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
அ + பெயர் = அப்பெயர்
இ + வழி = இவ்வழி

2. அந்த, இந்த, எந்த என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
அந்த + பையன் = அந்தப்பையன்
இந்த + பாம்பு = இந்தப்பாம்பு

3. அங்கு, இங்கு, எங்கு, ஆங்கு, ஈங்கு, யாங்கு, ஆண்டு, ஈண்டு, யாண்டு என்னும் இடப்பெயர்களின் பின்னால் வல்லினம் மிகும்.
அங்கு + செல் = அங்குச்செல்

4. அப்படி, இப்படி, எப்படி என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்

5. அதற்கு, இதற்கு, எதற்கு என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
அதற்கு + தூவு = அதற்குத் தூவு

6. எட்டு, பத்து என்பனவற்றின் பின்னால் வல்லினம் மிகும்.
ஒன்று + கேள் = ஒன்று கேள், இரண்டு + சட்டை = இரண்டு சட்டை ... என்று வரும், ஆனால்
எட்டு + பாட்டு = எட்டுப்பாட்டு.
பத்து + தொகை = பத்துத்தொகை.

7. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் ஒற்று மிகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்னால் வருமொழி பெயர்ச்சொல்லாக இருந்தாலும் ஒற்று மிகும் (உதாரணம்: பாக்குக் கடை)

தொடர்ந்து படிக்க...

வல்லெழுத்து மிகா இடங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக