# வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

TNPSC Group 4, VAO, Group 2, Group 2A Exams, TET, Police Exam Exam Study Notes
 
6ம் வகுப்பு - வரலாறு (முதல் பருவம்)
 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்


  • நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய  தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துக் கால வரிசைப்படி கூறுவது வரலாறு ஆகும்.
  • திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் நூறு ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
  • ஆதிச்சநல்லூரில் கி.பி. 2004இல் அகழ்வாராய்ச்சிப் பணியைத் தொடர்ந்தபோது ஒரே இடத்தில் 160க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • பொதுவாக, வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தையகாலம் என்று வரலாற்றினை இரு காலக்கட்டங்களாகப் பிரிக்கலாம்.
  • அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக் காலம் என்கிறோம்.
  • இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் எனலாம்.
  • பழைய கற்காலம் - Palaeolithic age (கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்)
  • புதிய கற்காலம் - Neolithic age (கி.மு.10,000 -கி.மு.4000)
  • செம்புக் கற்காலம் - Chalcolithic age (கி.மு.3,000 -கி.மு.1500)
  • இரும்புக் காலம் - Iron age (கி.மு.1500 -கி.மு.600)
  • ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

பழைய கற்காலம்:

  • மனிதன் ஓரே இடத்தில் நிலையாகத் தங்கி வாழவில்ûல்; காடுகளில் வாழ்ந்தான், மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
  • ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.
  • ஆதிமனிதன் இடி, மின்னல் முதலியவற்றுக்குப் பயந்தான்; அவற்றை வணங்கினான்.
  • read more & download pdf file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக