2017ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு


 


கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம். 

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான (2017) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ரிச்சர்டு தாலருக்கு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக் கோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைகழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ரிச்சர்டு தாலர் தனிமனித முடிவெடுக்கும் திறனால் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நோபல் பரிசை வென்ற ரிச்சர்டு தாலருக்கு சுமார் 7 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.  
TNPSC  Current affairs pdf free download  
Jana TNPSC Tamil Question Bank Free download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக