ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கைக் குறிப்பு

இந்தியாவில் சாதாரண குடிமகனாகப் பிறந்து முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்கலாம்!

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர். இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.
இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர். 2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர். இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்

TNPSC VAO Exam Study Materials

Basics of Village Administration Study Materials (88 Pages)

வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பணிகள் மற்றும் கடமைகள்

Revenue Manual (English Version)
 
 

தமிழ் இலக்கணம் - சொல் வகை

சொல் வகை
தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை வருமாறு:
1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்
(எடு.)
மலை - பெயர்ச்சொல்
சென்றான் - வினைச்சொல்
- இடைச்சொல்
மா - உரிச்சொல்
சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறு நான்கு வகையாகப் பிரிப்பர். அவை வருமாறு:
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

  • இயற்சொல்:

  • இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நிலத்தில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.
    (எ.டு.) மரம், வந்தான்
    செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
    தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
                                         (நன்னூல்:271)
     



  • திரிசொல்:
  • திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.
    (எ.டு)
    கிள்ளை, தத்தை, சுகம் -
    கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.
    வாரணம் -
    யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.

    ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்
    பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
    அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும் (நன்னூல் : 272)
                                    



  • திசைச்சொல்:

  • திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.
    (எடு.)
    சிறுகுளம் - இதனைப் ‘பாழி என்பர் பூழிநாட்டார்;கேணி என்பர் அருவாநாட்டார்.

    செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
    ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்
    தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப
                                     (நன்னூல் : 273)


  • வடசொல்:

  • வடசொல் என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும் உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.
    (எடு.)
    காரியம், காரணம் - பொது எழுத்தால் அமைந்தன.
    போகி, சுத்தி - சிறப்பெழுத்தால் அமைந்தன.
    கடினம், சலம் - இருவகை எழுத்தாலும் அமைந்தன.

    பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்
    ஈரெழுத் தானும் இயைவன வடசொல்
                                 (நன்னூல் : 274)

    click and download pdf file                        Click and download image file