TNPSC General Tamil Study Materials

நிகண்டுகள்

நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தொல்காப்பிய உரியியல் நிகண்டு போன்றது. தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந்நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது
 
இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது.
நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார்.

தமிழின் முதல் நிகண்டு நூல் திவாகர நிகண்டு. இதன் ஆசிரியர் திவாகர். இது ஆதி நிகண்டு எனப்படும்.

முதல் எழுத்து அகர வரிசையில் அமைந்த தமிழின் முதல் நூல் அகராதி நிகண்டு. நிகண்டில் 12 தொகுதிகள் இருக்கும்.

நிகண்டுகளின் ஆசிரியர்கள்‬
சேந்தன் திவாகர நிகண்டு - திவாகர்.
பிங்கல நிகண்டு - பிங்கலர்.
சூடாமணி நிகண்டு - மண்டல புருடர்.
சிந்தாமணி நிகண்டு - வைத்தியலிங்கம் பிள்ளை.
சூளாமணி நிகண்டு - ஈஸ்வர பாரதியார்
ஆசிரியர் நிகண்டு - ஆண்டிப்புலவர்.
அகராதி நிகண்டு - இரேவணசித்தர்.
கயாதர நிகண்டு - காங்கேயர்
உரிச்சொல் நிகண்டு - காங்கேயர்

அகராதி நிகண்டு - இரேவணர் சித்தர்
பொதிகை நிகண்டு - சாமிநாத கவிராயர்
அரும் பொருள் விளக்க நிகண்டு - அருமருந்து தேசிகர்
உசித சூடாமணி நிகண்டு - சிகம்பர கவிராயர்
கந்தசுவாமி நிகண்டு - சுப்பிரமணிய தேசிகர்
பிடவ நிகண்டு - ஔவையார்
ஒரு சொற்பல பொருள் நிகண்டு - கனகசபைப்புலவர்
கூடமலை நிகண்டு - ஈஸ்வர கவி
பாரதி நிகண்டு - பரமானந்த பாரதி
விரிவு நிகண்டு - அருணாச்சல நாவலர்
அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு - கோபால சாமி நாயக்கர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற