TNPSC- எக்ஸாம்க்கு அப்ளை பண்ண போறீங்களா?


அரசு வேலை என்பது அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய கனவு. அந்த கனவை நோக்கி அவர்கள் அனுதினமும் முயன்று கொன்டே இருக்கிறார்கள். பல பேரின் கடும் முயற்சிகள், விட்டுக்கொடுத்த பல்வேறு சந்தோசங்கள், பட்ட அவமானங்கள், செலவில்லாத நேரங்கள் என்று ஏராளமாக உள்ளன.
 
ஆனால், அவர்களின் அதனை முயற்சிகளும், செலவழித்த நேரங்களும், வீட்டுக் கொடுத்த சந்தோஷங்களும் பூஜியமாக எங்கு மாறுகின்றது என்று அவர்கள் அறிவது இல்லை. எங்கு தெரியுமா? நீங்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது பிரவுசிங் சென்டர்களில் உள்ளவர்களிடம் கொடுத்து உங்களது விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யச் சொல்கிறீர்களே, அங்குதான். ஏன் அவர்கள் நமக்கு நன்மைதானே செய்கிறார்கள்?, இதில் என்ன தவறு என்போர் தொடர்ந்து படியுங்கள்:

1. பிரவுசிங் சென்டரில் விண்ணப்பிக்க ஏராளமானோர் வருவார்கள், அவர்களால் உங்களை போன்று உங்களது தகவல்களை சரியாக விண்ணப்பத்தில் பதிவு செய்ய இயலாது.

2. நிறைய பேருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உங்கள் பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி, மதம், சாதி தொடர்பான தகவல்களை அவர்கள் தவறாக பதிவிட வாய்ப்பு உண்டு. இதனால் தேர்வில் வெற்றி பெற்றும் கலந்தாய்வின்போது பிரச்சினை வரலாம்.

3. சில பிரவுசிங் சென்டர்களில், போட்டியாளர்களுக்கு உண்டான, மின்-அஞ்சல் மற்றும் அலைபேசி எண்களை போடாமல் பிரவுசிங் சென்டருக்கு உண்டான மின்-அஞ்சல் மற்றும் அலைபேசி எண்களை போட்டு விண்ணப்பித்து விடுகிறார்கள். இதனால் நீங்கள், நாளை TNPSC- அலுவலகத்திலிருந்து வர வேண்டிய முக்கியமான தகவல்களை தவற நேரிடலாம். TNPSC- யிலிருந்து வீட்டு முகவரிக்கும் கடிதம் வரும், இருப்பினும் முகவரி,மெயில், போன் நம்பர் அனைத்தும் நம்மக்கு சொந்தமானதாக இருந்தால் மிக நன்று.
4. பலர் பிரவுசிங் சென்டரில் விண்ணப்பிக்கச் செல்லும் பொழுது அவர்களின் கல்விச் சான்றிதழ் நகல்களை எடுத்துச் செல்கிறார்கள் (Xerox). சென்டர் காரர்களும் அதனை வைத்து விண்ணப்பித்து விடுகிறார்கள். பின்னர் கலந்தாய்வின் போதுதான் தங்களிடம் அதன் ஒரிஜினல் இல்லை என்பதனை பலர் உணர்கிறார்கள். உதாரணமாக, சென்டர் காரர், ஒருவரது இளநிலை பட்ட படிப்பிற்க்கான, புரவிசனல் சர்டிபிகேட்டை வைத்து விண்ணப்பம் செய்து விட்டார் என்றால், விண்ணப்ப தாரரிடம், அதன் ஒரிஜினல் இருக்காது. இளநிலை கான்வோகேஷன் சர்டிபிகேட் ஒரிஜினல் மட்டுமே இருக்கும். தனது இளநிலை புரவிசனல் சான்றிதழை முதுநிலை படிப்பதற்காக கல்லூரியில் கொடுத்து இருப்பார். இது அவருக்கு விண்ணப்பம் செய்யும் அவசரத்தில் தெரியாது. எனவே எந்த எந்த ஒரிஜினல்கள் உங்களிடம் உள்ளன என்பதனை உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். இல்லை என்றால், தேவை இல்லாத மன உளைச்சல்தான்.

5. உங்களது சான்றிதழ் எண், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட தேதி போன்றவற்றை பதிவு செய்யும் பொழுது சிறிது தவறு நேரிட்டாலும் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாவது நீங்கள்தானே தவிர சென்டர் காரர் அல்ல. தற்போது TNPSC - விண்ணப்பத்தில் எடிட்டிங் வாய்ப்பையும் கொடுப்பதில்லை.

6.  பல சென்டர்களில், உங்கள் தகவல்களை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் நாங்கள் விண்ணப்பித்து விடுகிறோம். தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது அல்லது இணையம் மெதுவாக உள்ளது என்று நீங்கள் இல்லாமல் விண்ணப்பம் செய்வார்கள், அப்பொழுது அவர்கள் தவறு செய்ய அதிக வாய்ப்புண்டு. ஆனால் உங்களிடம் அவர்கள் " அதெல்லாம் கரெக்ட்டா போட்ருவோம் பாஸ், எத்தனை பேருக்கு அப்ளை பண்ணிக்கிட்டு இருக்கோம், நீங்க போயி உங்க வேலைய முடிச்சுட்டு வாங்க" என்றுதான் சொல்வார்கள். ஆனால் கரெக்ட்டா தவறாக விண்ணப்பித்து இருப்பார்கள்.
7. அடுத்து முக்கியமான பிரச்சினை என்னவென்றால், பணம் கட்டுவது. சில போட்டியாளர்கள், நான் மூன்று முறை கட்டண சலுகையை உபயோகித்து விட்டேன் என்று கூறியும், சரியான புரிதல் இல்லாமல் சில சென்டர்களில் கட்டண சலுகையில் விண்ணப்பித்து விடுகிறார்கள். நீங்கள் தெரியப்படுத்தவில்லை என்றால் அவர்கள் கட்டணத்தைப் பற்றி கேட்பதே இல்லை. நேரடியாக கட்டண சலுகை தான். இதனால் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் அபாயம் உண்டு.

8. சில சென்டர்களில், கட்டணத்திற்கு என்று ரூ.75 என்று தனியாக வாங்கிக் கொண்டு, விண்ணப்பிக்கும் போது போட்டியாளர் அருகில் இல்லை என்றால், சலுகை முறையில் போட்டு விண்ணப்பித்து ஏமாற்றி விடுகிறார்கள். இவர்களிடம் கவனம் தேவை. போட்டியாளர்களும் என் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டு விட்டது, ஹால் டிக்கெட் வரவில்லை என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள்.

9. முதலில் உங்களது நிரந்தரப் பதிவு பயனாளர் குறியீடு, மற்றும் கடவுச் சொற்களை அடுத்தவரிடம் பகிர்வதே தவறு என்பதனை நினைவில் கொள்ளுங்கள். அதில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றத்திற்கும் பொறுப்பாகாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இனி உங்கள் விண்ணப்பித்தினை நீங்கள்தானே பூர்த்தி செய்வீர்கள்.

நன்றி.

அன்புள்ள,
அஜி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற