Methods of Physical Education | உடற்கல்வி கற்பித்தல் முறைகள்

மாணவர்களுக்கு உடற்கல்வி என்பது மிகவும் இன்றியமையாததாகும். உடற்கல்வியை மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்பித்தலுக்கான வழிமுறைகளைப் பற்றி இந்த அலகு விவரிக்கிறது.

வகுப்பில் கட்டுப்பாட்டிற்கு மிகவும் முக்கியமானதாக பின்வரும் மூன்று பண்புகள் கருதப்படுகின்றன.
  • உடை
  • குரல்
  • நடத்தை
உடற்கல்வி வகுப்பை நடத்த மாணவர்களின் மிகச்சிறந்த எண்ணிக்கை 25 ஆகும்.
வகுப்பை சிறப்பாக செயலாட்சி புரிவதற்கு உடற்கல்வி ஆசிரியர் தேவையான பொழுது ஊதுகுழலை (Whistle) பயன்படுத்த வேண்டும்.
நல்ல வகுப்பு செயலாட்சிக்கு பின்வரும் அணியமைப்பை பயன்படுத்த வேண்டும்.
  • வரிசை அமைப்பு (Line)
  • அடுக்கு அமைப்பு (Files)
  • வட்ட அமைப்பு (Circle)
ஆசிரியரின் ஆளுமைத் திறனே வகுப்பை பெருமளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

கட்டளைகளின் வகைகள் பொதுவாக இரண்டு வகைப்படும்.
மறுசெயல் கட்டளையில் பின்வரும் பகுதிகள் உள்ளன.
  • விளக்கம்
  • இடைநிறுத்தம்
  • பிறைவேற்றம்
தாளக்கட்டளை பெரும்பாலும் பயிற்சியை திரும்பத் திரும்ப செய்யும்போது கொடுக்கப்படுகிறது.

ஒரு புதிய பயிற்சியை கற்பிக்கும் பொழுது பயன்படுத்தக்கூடிய மிகச்சிறந்த கற்பிக்கும் முறை கட்டளை முறை (Command Method) ஆகும்.

செயல்விளக்க முறையே கற்பிக்கும் முறைகளில் மிகச்சிறந்த முறையாகும்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற கற்பிக்கும் முறை நாடக முறை  (Dramatization Method)  ஆகும்.
பொருத்திய பயிற்சி முறை (Set Drill Method)  தாளத்துடன் பயிற்சிகளை கற்றுக் கொடுப்பதற்கு சிறந்த முறையாகும்.

உயரம் தாண்டும் பயிற்சியை கற்றுக் கொடுக்க சிறந்த முறை முழுமை முறை (Whole Method) ஆகும்.

முதன்மை விளையாட்டை கற்றுக் கொடுப்பதற்கு சிறந்த முறை முழுமை – பகுதி – முழுமை முறை.

போட்டியாட்டங்களை காண்பித்து கற்பிக்கும் முறை நுண்காட்சி முறை என அழைக்கப்படும்.

பாடக்குறிப்பு தயாரிக்கும் போது பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அவையாவன:-
  • பொருளடக்கம்
  • இணக்கம்
  • முன்னேற்றம்

பொதுப்பாடக்குறிப்பில் மிக இன்றியமையாமல் இடம் பெற வேண்டிய பகுதி ஒழுங்குமுறைப் பயிற்சி பற்றிய பகுதி ஆகும்.

பொதுப்பாடத்திட்டத்தில் இருந்திட அவசியமில்லாத பகுதி சிறப்புப் பயிற்சி பற்றிய பகுதி ஆகும்.

ஒழுங்குமுறைப் பயிற்சிக்கும், புத்துயிரளிக்கும் பயிற்சிக்கும் இடையே உள்ள நேரத்தில் சிறப்புப் பயிற்சி நடத்த வேண்டும்.

பொதுப்பாடக் குறிப்பில் கற்றுக் கொடுக்கப்படுவது அணிவகுத்து நடத்தல்.
கால்பந்து நுணுக்கம் சிறப்புப் பாடக்குறிப்பில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
பந்தயத்தின் வகைகள் நான்கு வகைப்படும். அவை பின்வருமாறு :

https://www.payumoney.com/store/product/0c27dff186d8a5fef80e65c828b4d9ba
  • நீக்கு முறை  (Knock Out)
  • தொடர் வாய்ப்பு பந்தயங்கள் (League)
  • ஒருங்கிணைந்த தொடர் போட்டிகள் (Combination)
  • சவால் போட்டா – போட்டி (Challenge)

    Physical Education Teacher Guide (Tamil) Buy Online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற