TNPSC Group 2A & VAO Exam Current affairs online Test-7


1. கனடா நாட்டின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (தலைப்பாகை கட்டிய) முதல் சீக்கிய பெண்மணி யார்??
(A) ப்ரீட் ஹில்
(B) பல்விந்தர் கவுர் ஷெர்கில்
(C) ப்ரீத் கவுர் கில்
(D) ராஜ்பிரீத் ஹில்
See Answer:

2. தமிழ்நாட்டின் முதல் பணமற்ற கிராமம் ‘கண்டலவாடி கிராமம்’ எந்த மாவட்டதில் உள்ளது?
(A) விழுப்புரம்
(B) தூத்துக்குடி
(C) காஞ்சிபுரம்
(D) கன்னியாகுமரி
See Answer:

டிஎன்பிஎஸ்சி பொதுத்தமிழ் இலக்கணம் | உருவக அணி

உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்ட விரும்புகிறார். கவிஞர்.
'தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு தோன்றுகிறது,

முகம் ஆகிய தாமரை

என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

     தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம்.எழுதும் பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகாஇடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும் சிதையும்.
     எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்தபொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், ‘யாரோ ஒருவர் தந்த பொம்மை’ என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.
     இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.
     அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.

# TNPSC & PG TRB Tamil Grammer | Punarchi vithigal

 புணர்ச்சி விதிகள்- தமிழ் இலக்கணம்
 வாழை மரம்
     இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர்.மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர். நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
     நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.

     வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
     வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி

     இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு "இயல்பு புணர்ச்சி" என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, "விகாரப் புணர்ச்சி" என்பதே அமைதலையும் காண்க.
     இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.

இலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை



பண்புத்தொகை என்றால் என்ன?

ஒரு சொல்லானது பொருளின் பண்பையும், குணத்தையும் உணர்த்திவந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

(எ.கா) செந்தாமரை

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

இலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை

 மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச் சொல்லால் தழுவப் பெற்றுவரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

Current Affairs 2017 Online Test-5


1. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) வினய்குமார்
(B) மனோகர் பாரிக்கர்
(C) விகாஸ் கிருஷ்ணா
(D) அரவிந்த் சுப்பிரமணியம்
See Answer:

2. இரவில் மின்னும் தவளை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
(A) அர்ஜென்டினா
(B) அந்தமான் நிக்கோபர்
(C) பிலிபைன்ஸ்
(D) வியட்நாம்
See Answer:

பொது கணக்குக் குழு Public Accounts Committee

பொது கணக்குக் குழு (Public Accounts Committee)

அரசின் நிதி நிர்வாகம் பொது கணக்கு குழுவின் பரிசீலனைக்குப் பின் முடிவடைகிறது. பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுவாக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் பொதுக் கணக்குக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்படுவார். பொதுக் கணக்குக் குழுவின் பதவிக் காலம் ஓர் ஆண்டாகும். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது. பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

Current affairs 2017 Online Test-4


1. இந்தியா AL Nagh-II என்ற பெயரில் எந்த நாட்டுடன் இராணுவப்பயிற்சி மேற்கொண்டது?
(A) ஓமன்
(B) இந்தோனேஷியா
(C) ஈரான்
(D) ஒடிசா
See Answer:

2. சர்வதேச லஞ்ச ஒழிப்பு உரிமை இயக்கத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?
(A) அமெரிக்கா
(B) ஜப்பான்
(C) லண்டன்
(D) பெர்லின்
See Answer:

TNPSC Group IIA Exam Current Affairs Question Answers


1. முழுவதும் முன்பதிவற்ற இந்தியாவின் முதல்ரயிலான அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் எந்நகரங்களுக்கிடையில் இயக்கப்பட்டுள்ளது?
(A) புதுடெல்லி-ஆக்ரா
(B) எர்ணாகுளம்-ஹெளரா
(C) புதுடில்லி-மும்பய்
(D) அகமதாபாத்-புவனேஸ்வர்
See Answer:

2. 29-வது சர்வதேச யோகா விழா நடைபெற்ற இந்திய நகரம்
(A) ரிஷிகேஷ்
(B) கொச்சி
(C) காந்திநகர்
(D) வாரணாசி
See Answer:

கோவில் கோயில் எது சரி?

தமிழில் கோவில், கோயில் ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஆலயத்தைக் குறிப்பதற்காக வழங்கப்பட்டு வருகின்றன.

இன்றிருக்கும் தமிழ் மொழியானது பல்வேறு மாற்றங்களையும் திரிபுகளையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது.

புணர்ச்சி விதிகளின்படி கோவில் என்பதே சரியான வார்த்தை. இரு சொற்கள் ஒன்றோடொன்று இணைந்து புது சொற்களை உருவாக்குவதே புணர்ச்சி இலக்கணம். அவை பல விதிகளை பின்பற்றுகின்றன.

கோவில் என்பதை கோ + இல் என எழுதலாம்.
கோ என்பது நிலைமொழி. கோ என்ற ஓரெழுத்து வார்த்தைக்கு ‘இறைவன்’ என்ற பொருளும் உண்டு. இல் என்பது வருமொழி, இல்லம் என பொருள்படும்.

# Constitution of Indian | இந்திய அரசியலமைப்பு முக்கிய குறிப்புகள்

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் - பகுதி 1

இந்தியா  இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற  (Secular), மக்களாட்சிக் (Democratic)  குடியரசு (Republic).
இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.
ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.

# தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் | ஆலந்தூர் கோ. மோகனரங்கன்

ஆலந்தூர் கோ.மோகனரங்கன் Video Study Material
  • பிறந்த நாள் 1.6.1942
  • சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தார்.
  • பெற்றோர் : ம.கோபால்-கே.மீனாட்சி
  • 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே புதிய பாதை என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியுள்ளார்.
  • மரபுக்கவிதைகள், கவிதை நாடகம், நாவல்கள், சிறுகதைகள் படைத்துள்ளார்.
  • காலத்தை ஒட்டி 2009 முதல் குறும்பா என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு | குடியரசுத் தலைவர்

  • குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
  • குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
  • குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
  • குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
  • குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
  • Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

நீர் நிலைகளின் வகைகள்



 (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

# காசோலைகளின் வகைப்பாடு

காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம்.
ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:

1.   ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)

2.   காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற  வேண்டும். (Drawer)

3.   காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்

 “அறிவு அற்றம் காக்கும் கருவி”    - திருவள்ளுவர்

“பயவாக் களரனையர் கல்லாதவர்”  -  திருவள்ளுவர்

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்”  -  திருவள்ளுவர்

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்  -  திருவள்ளுவர்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்   - திருவள்ளுவர்