அட்டவணைகள்
- அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
- முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
- பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
- 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
- எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
- எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.