# தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - அம்பை

அம்பை என்கிற சி.எஸ்.லக்ஷ்மி
பிறப்பு : 1944

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர்.

1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்.

பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. 
பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதரணமாய் தொட்டுச் சென்றவர். 

உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர்.

பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாய் படைத்தவர். 

தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
இவர் “SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

Click and Download PDF Study Material
 



Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற