இந்திய அரசியலமைப்பு பகுதி-12 | உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள்

உச்ச நீதிமன்றம்

இந்தியாவிலேயே உச்ச பட்ச நீதி அதிகாரம் கொண்ட அமைப்பு உச்ச நீதிமன்றமாகும்.

உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்த வழக்குகளை விசாரிக்கின்றது.

உச்ச நீதிமன்றத்தின் ஆள்வரை,  தனி ஆள்வரை (அ) முதலேற்பு ஆள் வரை, மேல் முறையீட்டு ஆள்வரை, நீதிப் பேராணை ஆள்வரை ஆலோசனை ஆள்வரை என நான்கு வகைப்படும்.

மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகள், இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்த வழக்குகளை நீதிமன்றம் தனி ஆள்வரை கீழ் விசாரிக்கிறது.
இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, உறுப்பு 32-ன் கீழ் நீதிப் பேராணை கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

இந்திய குடியரசுத் தலைவர் கேட்கும்பட்சத்தில் உறுப்பு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றம் சட்ட சிக்கல்கள் குறித்து ஆலோசனை வழங்குகிறது.

உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உணர்வை பாதுகாப்பதால் இது அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் எனப்படுகிறது.

உயர் நீதிமன்றங்கள்

உயர் நீதிமன்றம், மாநில நீதித்துறையின் தலைமையாகும்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும்.

ஒரு மாநிலத்தின் நீதித் துறை உயர் நீதிமன்றத்தினையும் கீழ் நீதிமன்றங்களையும் உள்ளடக்கியதாகும்.

பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குமோ, யூனியன் பிரதேசங்களுக்குமோ, சேர்த்து பொதுவான ஒரு உயர் நீதிமன்றத்தினை அமைக்கலாம் (விதி 231).
Part | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
Indian Political Science Question Answer pdf for tnpsc exam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற