டிஎன்பிஎஸ்சி (Group-IV) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டுமென முடிவு
செய்தவுடன் முதலில் மனநிலையை அதற்கேற்றவாறு உருவாக்கி விடவேண்டும்.
பொதுவாக குரூப்-4 தேர்வினை 10 லட்சம் முதல் 13 லட்சம் மாணவர்கள் வரை
எழுதுவதற்கு வாய்ப்புண்டு. இவ்வளவுபேர் எழுதக்கூடிய தேர்வில் நமக்கெல்லாம்
வேலை கிடைக்கவா போகிறது? என்று தான் நமது மனதில் முதலில் நினைக்கிறது.
முதலில் இம்மாதிரி எண்ணங்கள் தான் நமக்கு முதல் எதிரி. இடையூறு…
தடைக்கல்…. எல்லாமே. இந்த எதிர்மறை எண்ணத்தை போக்கிட அழுத்தம் திருத்தமாக
ஆணியடித்தாற் போல் சொல்கிறேன் நாம் நினைக்க வேண்டியது என்னவென்றால்……
எத்தனை லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினாலும் நாம் நன்கு எழுதினால்
நமக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை. இந்த
நம்பிக்கை தான் நம்மை கரை சேர்க்கும். இது போன்ற போட்டித் தேர்வுகளில்
வெற்றி அடைந்தவர்களிடம் கலந்துரையாடிப் பாருங்கள். அவர்கள் சொல்லும் முதல்
வேத வார்த்தை நம்பிக்கை பற்றி தான்.
தினசரி குறைந்தது 5 மணி நேரம்
படிக்கத்தொடங்குங்கள். 15 நாட்கள் கடந்தவுடன் 5 மணி நேரம் என்பதை
படிப்படியாக அதிகரித்து 8 மணிநேரம் வரை தினசரி படியுங்கள். ஒரு மாதம் இதனை
ஒரு தவமாக நினைத்து தினசரி 8 மணி நேரம் படித்து முடியுங்கள். இப்போது
நீங்கள் சொல்வீர்கள் நான் ஜெயித்து விடுவேன் என்று ஆம்மனமென்ற
மந்திரச்சாவி உங்கள் வசப்பட்டு விடும்.