பிரதமரின் புதிய காப்பீட்டுத் திட்டங்கள்

பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா

* பிரதன் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரூபாய் 2 இலட்சம் மதிப்புடைய காப்பீடுத்  திட்டமாகும்.

* வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 18-50 வயதுடைய அனைவரும் வருடத்திற்கு ரூபாய்  330 -ஐ மட்டும் பிரிமியம் செலுத்தி இக்காப்பீடு திட்டத்தில் இணையலாம்.


* இந்த பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஒய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

* வங்கியின் விருப்பத்தை பொறுத்து எல்ஐசி மூலமாகவோ அல்லது மற்ற காப்பீடு நிறுவனங்களின் வழியாகவோ இந்த திட்டம் வழக்கப்படும்.

அடல் பென்சன் யோஜனா

* 18-40 வயது வரை உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அனைவரும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் அடல் பென்சன் யோஜனா திட்டதில் சேரலாம்.

* குறைந்தபட்ச வைப்பு பென்சன் தொகை மத்திய அரசால் உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

* ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்த தொகையை செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ. 1000 முதல் 5000 வரை பென்சன் பெறலாம்.

* வங்கி கணக்கு வைத்திருக்கும் வயது தகுதி உடைய அனைவரும் சுரக்ஷா பீமா யோஜனா, ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா ஆகிய மூன்று திட்டங்களிலும் சேரலாம். இதற்கான விவரங்களை கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற