TNPSC
exams (Group 1, Group 2, VAO, Group 4) TET | PG TRB : General Knowledge
Study materials books pdf Free download Tamil - English | Police (SI) |
RRB | Postal | TNEB Exam
புரோட்டோசோவாக்களும், புரோட்டோ சோவ நோய்களும்
TNPSC Group I, Group II, Group IIA Exam
Science Study Materials
புரோட்டோசோவாக்கள் ஒருசெல் உயிரிகளாகும். சிலவகை புரோட்டோசோவாக்கள்
மனிதரில் ஒட்டுண்ணியாக இருந்து மலேரியா, சீதபேதி, தூக்க வியாதி போன்ற
நோய்களை உருவாக்குகிறது.
மனிதரில் காணப்படும் நோய் உருவாக்கும் ஒட்டுண்ணிகள்
மனிதரில், தட்டைப்புழு, கல்லீரல்புழு, உருண்டைப்புழு: டீனியாசிஸ், ஆஸ்காரி
யாசிஸ், பைலேரியா போன்ற ஒட்டுண்ணிகள் மூலமாக நோய்கள் உண்டாகிறது.
மனிதர்களிடம் காணப்படும் நுண்ணுயிரிகளும், நோய்த் தடுப்பு முறைகளும்
வைரஸ் நோய்கள்
சாதாரணச்
சளி: நூற்றுக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இந்நோய்க்குக் காரணிகளாக உள்ளன.
பெரியவர்களை விட குழந்தைகளே அதிகமாகப் பாதிப்படைகின்றனர்.
நோயின் அறிகுறிகள்
1. சுவாசப்பாதையும், அதன் மேற்புறங் களிலுள்ள நாசி எபித்தீலிய திசுக்களின் வீக்கம்.
2. சளி ஒழுகுதல்.
3. தலைவலி, காய்ச்சல்.
இச்சாதாரணச் சளியினால் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்து நிமோனியா,
மூச்சுக்குழல் நோய்கள் போன்றவை இந்நோய்ச்சார்ந்த துணை உபாதைகள் ஏற்படும்.
இந்நோய் நோயாளியின் நாசி, வாய் வழியாக தெறிக்கும் திவலைகள், நோயுற்றவர்
பேசுதல், சிரித்தல், சளி சிந்துதல் போன்ற செயலினால் பிறருக்கு பரவுகிறது.
நல்ல சத்துள்ள உணவு, நோயாளியுடன் தொடர்பினைத் தவிர்த்தல், சரியான ஆடை
உடுத்துதல் போன்றவை மூலம் நோயைத் தவிர்க்க இயலுமே தவிர, வேறு விதமான
சிறப்பு நடைமுறைகள் ஏதுமில்லை.
இன்புளுயன்சா
1970ல் உலகை ஆட்டிப்படைத்த ஒரு கொடுமையான நோய்.
நோய்க் காரணி:
A (H1 N1) எனப்படும் வைரஸ் இந்நோயைப் பரப்புகிறது. இது உருண்டை வடிவிலும் எளிதில் பரவும் கொடுமையான வகையைச் சார்ந்தது.
நோயின் அறிகுறிகள் :
திடீரென தோன்றும் காய்ச்சல், முதுகுபுறத்திலும், கை, கால்களில் கடுமையான வலி.
Sir I want your phone number please send me 9629619146
பதிலளிநீக்கு