# TNPSC Exam General Tamil | இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு


வேலு நாச்சியார்:
  • வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
  • இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார்.
  • ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது.
    read more 
கடலூர் அஞ்சலையம்மாள்
  • கடலூர் அஞ்சலையம்மாள் 1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.
  • 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலையம்மாளும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்.
  • அஞ்சலையம்மாள், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
  • மேலும் அவர் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.
    read more
அம்புஜத்தம்மாள்
  • அம்புஜத்தம்மாள் வசதியான குடும்பத்தில் 1899ஆம் ஆண்டு சனவரித் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார்.
  • அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார். பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம் அனைத்தையும் துறந்தார். பல்வேறு கட்டுப்பாடுகள் மிகுந்த குடும்பத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டார் .
  • வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
  • காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அம்புஜத்தம்மாள் அழைக்கப்பட்டார்.
  • தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.
  • அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியுள்ளார்.
மேலும் விரிவாக படிக்க & PDF பதிவிறக்கம் செய்ய





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற