* இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள்

Published on : 06th November 2017 

சொத்து மதிப்பு, சமூக அங்கீகாரம், தொழில் முன்னேற்றம், சாதனை, சேவை, உள்ளிட்ட பல திறமைகளின் அடிப்படையில் போர்ப்ஸ் பத்திரிகை உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு இப்பட்டியலில் 23 புதிய பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.  அதில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்களும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் சான்ஸலர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகி உள்ளார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்., பேஸ்புக் CEO ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், Ge நிறுவனத்தின் CEO மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப்19-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்திலும், ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்கள்.

ICICI தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 32-வது இடத்திலும், HCL கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா 71-வது இடத்திலும் உள்ளனர். இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 91-வது இடத்தில் உள்ளார்.

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற