Group 4 Distribution of vacancies List பார்ப்பது எப்படி?

Group 4: Distribution of vacancies List பார்ப்பது எப்படி?
(Group-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு)

நேற்று துறை TNPSC வாரியாக, எந்த எந்த பணி இடங்களுக்கு, எந்த எந்த பிரிவில் வேலை காலி இடங்கள் உள்ளது என்று அறிவித்து இருந்தது. என்னிடம் பெரும்பாலோனோர் நாங்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்து இருந்தாலும் இந்த அட்டணவனையின் மூலம் எப்படி எங்களுக்குரிய காலியிடங்களை பார்ப்பது என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள். எனவேதான் இந்தப் பதிவு.
Junior Asst. க்கு என்று சொல்லப்பட்ட 3333 காலி இடங்களில், அனுமதி கிடைக்காத பட்சத்தில் 472 

பணி இடங்கள் குறைக்கப்பட்டு, தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு அனுமதி கிடைக்கப்பட்ட 126 பணி இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. 

JA மற்றும் இதர பணிகளுக்கு, குறைக்கப்பட்ட பணி இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வு அல்லது இரண்டாம் கட்ட கலந்தாவின் பொழுது அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சேர்க்கப்படலாம் அல்லது சேர்க்கப் படமால் போகலாம்.


இந்த அட்டவணையில் மொத்தம் பக்கங்கள் உள்ளன. முதலில் சீரியல் நம்பர் இருக்கும், பின்னர் டிபார்ட்மென்ட் இருக்கும், அதன் பின்னர் சர்வீஸ் என்று இருக்கும். 

இதில் TNMS என்பது, எனப் TAMIL NADU MINISTERIAL SERVICE பொருள் படும்.

அது போல் TNJMS, என்பது TAMILNADU JUDICIAL MINISTERIAL SERVICE எனப் பொருள்படும். நீதி மன்றம் சம்பந்தப்பட்ட காலி இடங்கள் இதன் கீழ் செல்லும்.
TNPSC சரிபார்ப்பின் போது ஏற்கனவே, வெளியிட்டுள்ள ஓவர் ஆல் ரேங்க் லிஸ்டில், நீங்கள் எந்த எந்த பிரிவிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்களோ அந்த அந்தப் பிரிவில் உள்ள உங்கள் வகுப்பிற்கு உள்ள பணி இடங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

கீழ்க் கண்ட இணைப்பில், உங்கள் ஓவர் ஆல் ரேங்க் எந்த எந்த பிரிவுக்குகளுக்கு தகுதியானது என்று பார்த்துக் கொள்ளலாம்.
FOR JUNIOR ASSISTANT/FIELD
SURVEYOR/DRAFTSMAN:
FOR STENO TYPIST
FOR TYPIST:
உதாரணத்திற்கு BC Women என்றால், அவரது ஓவர் ஆல் ரேங்க் பின்வரும் எந்த எந்த பிரிவுகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும்.
General Turn (General)
General Turn (General)‐Tamil Medium
General Turn (Woman)
General Turn (Woman)‐Tamil Medium
----------------------------------------------------------
Backward Class‐OTM (General)
Backward Class‐OTM (General)‐Tamil Medium
Backward Class‐OTM (Woman)
Backward Class‐OTM(Woman)‐Tamil Medium
General Turn (General) ‐DA‐Ortho ( மாற்று திறனாளியாக இருந்தால்)
அதாவது அந்த BC பெண் மிக அதிகமான மதிப் பெண்களை பெற்று இருந்தால் மேற்கண்ட அனைத்து பிரிவிலும் அவரது ஓவர் ஆல் ரேங்க் வரும். 

ஏன் என்றால், அவர் பொது பிரிவிற்கும் (GENERAL QUOTA), அவரது வகுப்பினைச் சார்ந்த இட ஒதுக்கீட்டிற்கும் (BC QUOTA) தகுதி பெறுகிறார்.

அவருக்கு பணி எடுக்கும் வாய்ப்புகள், துறையைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பொது பிரிவிற்கு தகுதி பெறாத சற்றே குறைவான ஓவர் ஆல் ரேங்க் வைத்து இருப்பவர்கள், தங்கள் வகுப்புகளில் உள்ள பிரிவில் (COMMUNITY ONLY) பார்க்கலாம். இது போல், மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர், DEAF, PSTM, BLIND என்று அவரவர் வகுப்பில் இட ஒதுக்கீடு உண்டு. 

எனவே இம் முறையின் மூலம் முதலில் எந்த எந்த பிரிவுகளில் உங்கள் ஓவர் ஆல் ரேங்க் வந்து உள்ளது என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் இந்த எட்டு (8) பக்கங்கள் கொண்ட அட்டவணையை பிரிண்ட் எடுக்க வேண்டும். A4 பேப்பரில் எடுப்பதை விட, A3 பேப்பரில் எடுப்பது சிறந்தது. DOUBLE SIDE PIRINT எடுக்க கூடாது. SINGLE SIDE பிரின்டிங் எடுக்க வேண்டும்.

பக்கம் ஒன்று (ONE) இடது புறமும், பக்கம் ஐந்தை (FIVE) வலது புறமும் வைத்து பொருத்தி (படம் 1 ஜக் காண்க.) நீங்கள் எந்த எந்த பிரிவிற்கு தகுதியானவர் என்று முன்பு பார்த்து வைத்து இருந்தீர்களோ, அந்த பிரிவில் உள்ள காலி இடங்கள் மற்றும் துறையை தெரிந்து கொள்ளலாம்.
இதே போல், பக்கம் 2 (TWO) ஐ பக்கம் 6 (SIX) உடன் பொறுத்த வேண்டும்.
இதே போல், பக்கம் 3 (THREE) ஐ பக்கம் 7 (SEVEN) உடன் பொறுத்த வேண்டும்.
இதே போல், பக்கம் 4 (FOUR) ஐ பக்கம் 8 (SIX) உடன் பொறுத்த வேண்டும்.
page 01 with page 05
page 02 with page 06
page 03 with page 07
page 04 with page 08
ஒருவர் இளநிலை உதவியாளர் (Junior Asst) மற்றும் தட்டச்சர் (Typist) இரண்டிற்கும் தேர்வாகி இருந்தால் அந்த அந்த பதவிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை (Both JA and Typist vacancy distribution list) தனி தனியாக பிரிண்ட் எடுத்து இரு பதவிகளுக்கும் உண்டான தங்கள் காலி இடங்கள், துறை, முதலியவற்றை பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் தகுதி பெற்றுள்ள துறைகளை, தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். கலந்தாய்வு செல்லும் போது எளிதாக இருக்கும்.
வாழ்த்துக்கள்.
அன்புள்ள
அஜி
சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற