கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும்
குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த
பெருமைக்குச் சொந்தக்காரர். சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில்
ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2
தமிழ்வழியில் படித் தார். 1998-ம் ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த போது
கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது தந்தை கந்தசாமி திடீரென
மரணம் அடைந்தார். குடும்பம் நிலைகுலைந்து போனது.
இளம்பகவத்தால் கல்லூரிக்குச் சென்று படிக்க இயலவில்லை. தந்தை அரசு ஊழியர்
என்பதால் அவரது மறைவுக்குப் பின் வாரிசு வேலைக்காக முயற்சி செய்தார். 1998
முதல் 2005-ம் ஆண்டு வரை இதற்காக அரசு அலுவலகங்களுக்கு நடை யாய்
நடந்ததுதான் மிச்சம். வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே, 2001-ம் ஆண்டு
சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ
(வரலாறு) படித்து பட்டம் பெற்றார்.