TNPSC இணைய தளத்தில், ஏற்கனவே ஒரு முறைப் பதிவு (One time registration) செய்து இருப்பவர்கள், தங்களின் பயனாளர் ஐ.டி (User ID) மற்றும் கடவுச் சொல் (Password) இதில் ஏதாவது ஒன்றை மறந்து விட்டால், அதனை TNPSC கொடுத்து இருக்கும் வாய்ப்பில் (Option) சென்று நமது விபரங்களைக் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம். பார்க்க படம்.
இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இதில் நான் சொல்ல வருவது என்னவென்றால், மறந்து போன நமது User id/ Password போன்றவற்றை மீண்டும் பெற நாம் நமது 10ம் வகுப்பு பதிவு எண்ணை (பள்ளி இறுதி வகுப்பு எண்) சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண்ணானது, பூஜ்யத்தில் ஆரம்பித்து, அதனையும் சேர்த்து நீங்கள் உள்ளீடு செய்தால் தவறான பயனாளர் என்று தகவல் வரும். உங்களால் உங்களது மறந்து போன User id/Password பெற முடியாது.
அதற்கு மாறாக முதலில் உள்ள பூஜ்யத்தை நீக்கிவிட்டு உள்ளீடு செய்தால் நீங்கள் உங்கள் மறந்து போன தகவலை தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக, உங்கள் 10ம் வகுப்பு பதிவு எண் 041528 என்று வைத்துக் கொண்டால், நீங்கள் உள்ளீடு செய்யும் போது 41528 என்று மட்டுமே செய்ய வேண்டும். மாறாக முதலில் உள்ள பூஜ்யத்தை சேர்த்தால், பதில் வராது. Invalid User Details என்று வரும்.
உங்கள் நிரந்தரப் பதிவு User Id / Password மறந்து மறந்து விட்டன என்பதற்க்காக புதிதாக ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்கினை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
வரும் செவ்வாய் TNPSC தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை என்ன என்பன பற்றி பார்ப்போம்.
அன்புள்ள
அஜி
சென்னை.
TNPSC STUDY MATERIALS | NOTIFICATION | ANNOUNCEMENT
லேபிள்கள்
- CCSE-IV (16)
- Current Affairs (34)
- ECONOMICS (4)
- Exam Tips (23)
- GK Questions (14)
- GROUP IV EXAM (148)
- General Tamil (54)
- Group 2A (93)
- Group I & II Mains (6)
- History (30)
- Indian Constitution (28)
- Maths (2)
- Notification (6)
- Online Test (37)
- PG TRB (9)
- Police Exam (10)
- SHORTCUTS TIPS (10)
- Science (23)
- Social Science (6)
- Syllabus (4)
- TET MODEL QUESTION PAPERS (20)
- TET STUDY MATERIALS (27)
- TNPSC Current Notifications (3)
- TNPSC GK (25)
- TNPSC Group 1 & 2 study materials (30)
- TNPSC MODEL QUESTION PAPERS (37)
- TNPSC News (6)
- TNPSC Previous Year Question Papers (4)
- TNPSC STUDY BOOKS (10)
- TNPSC STUDY MATERIALS (39)
- TNPSC TAMIL MATERIALS (19)
- Tamil Grammar (29)
- VAO Exam (145)
- சைவமும் வைணவமும் (2)
- தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)
- தமிழ் இலக்கியம் (24)
- பார் படி ரசி (6)
- பொதுத்தமிழ் (44)
- வேலைவாய்ப்பு அறிவிப்புகள் (2)
உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக