இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | பகுதி-3

அட்டவணைகள்
  • அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எட்டு அட்டவணைகளைக் கொண்டி ருந்தது.
  • முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் (1951) வழியாக ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
  • பத்தாவது அட்டவணை 52-வது திருத்தத்தின் (1985) மூலம் சேர்க்கப்பட்டது.
  • 1992-ல் கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி 11, 12வது அட்டவணைகள் சேர்க்கப்பட்டன.
  • எட்டாவது அட்டவணையில் தொடக்கத்தில் 14 மொழிகள் இடம் பெற்றிருந்தன.
  • எட்டாவது அட்டவணையில் 21-வது திருத்தத்தின் (1967) மூலம் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
  • எட்டாவது அட்டவணையில் 71-வது திருத்தத்தின் (1992) மூலம் கொங்கணி, மணிப்புரி,நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன.
  • எட்டாவது அட்டவணையில் 92-வது திருத்தத்தின் (2003) மூலம் போடோ (அஸ்ஸாம்). டோஹ்ரி (காஷ்மீர்) , மைதிலி (பீகார்) , சந்தாலி (பீகார்) ஆகிய மொழிகள்  சேர்க்கப்பட்டன.
  • ஏழாவது அட்டவணையில் மத்திய பட்டியலில் 100 பொருள்களும், மாநில பட்டியலில் 61 பொருள்களும், பொதுப் பட்டியலில் 52 பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
  • ஒன்பதாவது அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசமைப்பு அட்டவணைகள் (Schedules )

  • முதல் அட்டவணை : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்.
  • இரண்டாவது அட்டவணை : குடியரசுத் தலைவர், ஆளுநர், உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள்.
  • மூன்றாவது அட்டவணை : பதவி யேற்பு உறுதி மொழிகளின் பட்டியல்.
  • நான்காவது அட்டவணை : மாநிலங்களுக்கான ராஜ்யசபா இடங்களின் எண்ணிக்கை.
  • ஐந்தாவது அட்டவணை : பட்டியல் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் நிர்வாகம்.
  • ஆறாவது அட்டவணை : அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்.
  • ஏழாவது அட்டவணை : மத்திய மாநில அதிகார பகிர்வு பட்டியல்.
  • எட்டாவது அட்டவணை : அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் பட்டியல் (22 மொழிகள்).
  • ஒன்பதாவது அட்டவணை : உச்ச நீதிமன்ற மேலாய்விலிருந்து பாதுகாப்பு பெற்ற சட்டங்கள்.
  • பத்தாவது அட்டவணை : கட்சித்தாவல் தடைச் சட்டம்
  • பதினோறாவது அட்டவணை : பஞ்சாயத்து ராஜ் தொடர்பான அம்சங்கள் (29 பொருள்கள்).
  • பன்னிரண்டாவது அட்டவணை: நகராட்சி தொடர்பான அம்சங்கள் (18 பொருள்கள்).

முக்கிய உறுப்புகள் (Articles)

  • உறுப்பு 1 - 4: இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
  • உறுப்பு 5 - 11: குடியுரிமை (Citizenship)
  • உறுப்பு 12 - 35: அடிப்படை உரிமைகள். (Fundamental Rights)
  • உறுப்பு 14: சமத்துவ உரிமை.
  • உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அனைவருக்கும் சம வாய்ப்பு).
  • உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
  • உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
  • உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
  • உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.
  • உறுப்பு 21A : கல்வி அடிப்படை உரிமை (6-14 வயது உட்பட்டவருக்கு).
  • உறுப்பு 25: சமய உரிமை.
  • உறுப்பு 36  51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
  • உறுப்பு 32: அரசியல் சட்டத் தீர்வு உரிமை   (Constitutional Remedies)
  • உறுப்பு 40: கிராம பஞ்சாயத்து அமைப்பு.
  • உறுப்பு 44: பொது சிவில் சட்டம்.
  • உறுப்பு 45: இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு).
  • உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
  • உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
  • உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)
  • உறுப்பு 52 - 151: மத்திய அரசாங்கம்
  • உறுப்பு 79: பாராளுமன்ற வரையறை
  • உறுப்பு 110: பண மசோதா (Money Bill )
  • உறுப்பு 108: பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting)
  • உறுப்பு 112: ஆண்டு நிதிநிலை அறிக்கை (Annual Budget)
  • உறுப்பு 143: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
  • உறுப்பு 152 - 237: மாநில அரசாங்கம்
  • உறுப்பு 156: ஆளுநரின் பதவிக் காலம்
  • உறுப்பு 226: உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
  • உறுப்பு 280: நிதி ஆணையம்
  • உறுப்பு 300A: சொத்துரிமை
  • உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
  • உறுப்பு 352: தேசிய அவசரநிலை பிரகடனம் (Emergency Provisions)
  • உறுப்பு 356: மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
  • உறுப்பு 360: நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
  • உறுப்பு 368: அரசியல் சட்ட திருத்தம் ( Amendments to the constitution)
  • உறுப்பு 370: ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்
    Part | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற