தமிழ் இலக்கிய வரலாறு | ஆற்றுப்படை நூல்கள்

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் (அ) கூத்தரற்றுப்படை என ஆற்றுப்படை நூல்களாகும். பத்துப்பாட்டில் தெய்வங்களது அருளைப் பெற்ற சான்றோர் பக்தர் ஒருவர் அருள் பெற விழையும் மற்றொருவருக்குக் கூறும் வகையில் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் சமய நெடும் பாடலாகவும்,  பதினோராந்திரு முறையில் வைத்துப் போற்றப் பெறுவதாகவும் அமைந்துள்ளன. சமயம் மக்களைப் பக்குவப்படுத்தும் நோக்கில் நெறியோடு அறத்தை பாதுகாப்பதாக  அமைந்துள்ளது.


ஆற்றுப்படை விளக்கம்

ஆறு என்னும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருளாகும்.  ஆற்றுப்படுத்துதல் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப்படுத்தலாகும். வறுமையோடு இருப்பவனை அவன் துயர்களைப்  போக்கி  பெருஞ்செல்வம் பெறுமாறு அவரையும் வழிப்படுத்துதலே  ஆற்றுப்படை என்னும் நூலாகும்.


ஆற்றுப்படை என்பது ஒருவகையான பாடல் மரபுடையது. புரவலரைக் காணாது வறுமையில் வாடுகின்றான் ஒரு கலைஞன். புரவலன் ஒருவனைக் கண்டு பரிசில்கள் பெற்று சீரும் சிறப்புமாகத் திரும்புகின்றான்  மற்றொரு கலைஞன். இவன் அவனைப் பார்க்கின்றான், இரக்கத்தால் அவன் வாழ வழி காட்டுகின்றான். அவன் புரவலனிடத்து சென்றால் வறுமை தீரும், கலை வளரும், தன்மானம் அழியாது எனக் கூறி பாணர், கூத்தர், பொருநர், விறலியர், புலவன் போன்றோர்  வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தை  தாம் பெற்றவற்றை எல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும் என்று கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

பாடப்பட்டோன் வரலாறு

திருமுருகாற்றுப்படை நக்கீரால் பாடியவை. இவர் முருகப் பெருமானின் மீதுள்ள அன்பின் காரணமாக 317 அடிகளில் ஆசிரியப்பாவால் பாடப் பெற்றவையாகும்.

திருமுருகாற்றுப்படை, முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்டதாகும். கரிகாற்பெருவளத்தான் அறச்சிறப்புகளைப் பற்றி 248 அடி ஆசிரியப்பாவால் பாடப் பெற்றவையாகும்.

சிறுபாணாற்றுப்படை,  நல்லூர் நத்தத்தனரால் பாடப்பட்டதாகும். இவை ஒய்மாநாட்டு நல்லியக்கோன் அரசனாக இருந்து கடையெழு வளளல்களில் ஒருவனாக திகழ்ந்தான். அறக்கோட்பாட்டில் சிறிதும் தவறாமல் ஆண்டு வந்தான். இவை 269 அடிகளால் ஆனவையாகும்.

பெருபாணாற்றுப்படை, அடியலூர் கூடுத்தரக்கண்ணாரால் பாடப்பட்டவையாகும். தொண்டைமான் இளந்திரையன் அறப்பண்போடு வாழ்ந்ததை  500 அடி பாடல்களில் விளக்குகின்றன.

மலைப்படுகடாம்,  பெரும் குன்றூர்ப் பெரும் கௌசிகனாரால் பாடியவையாகும். நன்னன் வள்ளல், தன்மையில் இலக்கணமாக திகழ்ந்தவனாகும்.  இவை 583 அடி பாடல் வகை கொண்டவையாகும்.

1. திருமுருகாற்றுப்படை

முருகனிடம் அருள் பெற்ற புலவன் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் வீடுகளுக்குச் சென்று அவனைப் போற்றி வணங்கி யாராலும் பெற முடியாத பரிசு பெற்றுக்கொள் என்ற கருத்து இந்நிலையில் உள்ளது. புலவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்தியதால்  இந்நூல் புலவர் ஆற்றுப்படை என்றும் கூறுவர்.

வீடு பேற்றுக்கமைந்த திருவருள் ஞானத்தை நல்குதலின் தலைவியற்று நிற்கும் குறவன் முருகப் பெருமான் ஆதலால்,  ஆற்றுப்படைக்கு இடனாகின்ற வகையில் முருகப்பெருமான் திருப்பெயரால் இந்த ஆற்றுப்படை திருமுகாற்றுப்படை என வழங்கப்படுகின்றது என்பர்.

திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை வீடுகள் பற்றிக் கூறுவதால் ஆறு பகுதிகளாக அமைந்துள்ளது. முருகன்,  குறிஞ்சி நிலச் சிறப்புக் கடவுள்.  ஆதலால்  பொதுப்படை மலை நாட்டிற்குரியவன் முருகன் ஆவான்.  குறமகள் செய்யும் வழிபாடும் கூறி அப்பெருமானைப் புதிய பக்தன் எப்படி வழிபட வேண்டும் என்பதைச் சுட்டி முருகன் அருள் புரியும் திறத்தினையும் கூறியுள்ளது. அத்தகைய செவ்வேலையுடைய முருகப் பெருமானுடைய சேவடியை அடையும் நல்ல உள்ளத்தோடு நீ புறப்பாடு என்று வீடு பேற்றினை விரும்பும் புலவனிடம் கூறுவதாகும்.

சூர மகளிர் செயல்களும் முருகக் கடவுள் சூரனைச் சம்காரம் செய்த சிறப்பும், மதுரையின் பெருமையும் திருப்பரங்குன்றக்  கோட்பாட்டில் சிறப்பாக அமைந்துள்ளன.

திருமுருகாற்றுப்படை அக்கால சமுதாயத்தில் நிலவிய தெய்வங்கள், கோவில்கள், வழிபாடு முறை, தெய்வ வணக்கம் ஆகியன இடம் பெற்றுள்ளன.

தெய்வ வழிபட்டில், எண்ணிய காரியங்களிலே எளிதில் வெற்றி பெறலாம் என்று நம்பினர். துன்புற்றவர்களின் துயரங்களைப் போக்கும் அவர்களை இன்புற்று வாழச் செய்யும் இத்தகைய ஆற்றலும், அருளும் உடையது தெய்வம் என்று நம்பினர்.

2. பொருநராற்றுப்படை

சோழன் கரிகாலனைப் பற்றிப் புகழ்ந்து  பாடிய பாட்டு பொருநராற்றுப்படை ஆகும். கரிகாலனுடைய கொடைத்தன்மை, வீரத்தன்மை, அரசியல் மேன்மை, பெரும் புகழ் போன்ற செய்திகள் இடம் பெறுகின்றன. மிக இளம் வயதிலேயே அரசன் ஆனவன், முதியவன் போல் வேடமிட்டுக் கொண்டு ஒரு வழக்கில் தீர்ப்புக் கூறியவன், இமயம் வரை சென்று  பல மன்னர்களை வென்றவன், தமிழ்நாட்டில் சேரனையும், பாண்டியனையும் வென்று பெரிய அரசனாக விளங்கியவன், இவன் காவிரி ஆற்றுக்குக் கரை அமைத்தவன், கல்லணை கட்டியவனும் இவனே என்பர்.

அரசனின் விருந்தோம்பும் பண்பு, இந்நூலில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுகின்றது. கரிகால் வளவனின் இளமை, தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தியமை, வெண்ணிப் போர் வெற்றி என்ற வரலாற்று செய்திகள் வரிசையாகக் கூறப்படுகின்றன.  அவனுடைய வீரச் சிறப்பும், கொடைச் சிறப்பும் நன்கு பேசப்படுகிறது.

அறங்கூறும் நூல்களை அறிந்து அம்முறையைப் பின்பற்றி ஆட்சி புரிந்தவர். பகைவர்களை வெல்லும் வேற்படையையுடைய சிறந்த வீரன் (228 & 231) என்றும் கூறப்படுவதிலிருந்து மன்னன் கரிகாலனின் பண்பும் ஆட்சிச் சிறப்பும் அறியப்படுகின்றது.

அக்கால சமுதாயத்தில் கரிகாலன் என்னும் சோழமன்னனின் அரசியல் வாழ்க்கைப் பற்றி பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடுகின்றது. கரிகாலன் தன் அரசியல் வாழ்க்கையில் நீதியையும், நேர்மையும் கைக்கொண்டிருந்தான் என்பதையும், இவன் நடுநிலைமை தவறாமல் நீதி வழங்குவோன் (187&188)  என்றும், கரிகாலன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆண்டவன், குடிமக்களிடன் குறையாத அன்பு கொண்டவன் என்றும் இதில் குறிப்பிடப்படுகிறது.

ஆற்றுப்படை நூல்களிள் சிறியது பொருநராற்றுப்படை (248 அடி)

read more
Download pdf file



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற