கோவில் கோயில் எது சரி?

தமிழில் கோவில், கோயில் ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஆலயத்தைக் குறிப்பதற்காக வழங்கப்பட்டு வருகின்றன.

இன்றிருக்கும் தமிழ் மொழியானது பல்வேறு மாற்றங்களையும் திரிபுகளையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது.

புணர்ச்சி விதிகளின்படி கோவில் என்பதே சரியான வார்த்தை. இரு சொற்கள் ஒன்றோடொன்று இணைந்து புது சொற்களை உருவாக்குவதே புணர்ச்சி இலக்கணம். அவை பல விதிகளை பின்பற்றுகின்றன.

கோவில் என்பதை கோ + இல் என எழுதலாம்.
கோ என்பது நிலைமொழி. கோ என்ற ஓரெழுத்து வார்த்தைக்கு ‘இறைவன்’ என்ற பொருளும் உண்டு. இல் என்பது வருமொழி, இல்லம் என பொருள்படும்.

இவ்வார்த்தைக்கான புணர்ச்சி உடன்படுமெய் புணர்ச்சி

இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் (நன்னூல், 162:1-2)
நிலைமொழியின் (முதற்சொல்லின்) முடிவு இ, ஈ, ஐ ஆகிய உயிரெழுத்தில் முடிந்து, அடுத்து வருகின்ற சொல் (வருமொழி) உயிரெழுத்தில் தொடங்கினால் ய் என்னும் யகர மெய் இடையில் தோன்றும்.

நிலைமொழியின் இறுதி எழுத்து அ,ஆ,உ,ஊ,ஓ ஆக இருந்து வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பின் ‘வ்’ என்ற உடன்படுமெய் நடுவில் தோன்றும். (ஏனை  உயிர்வழி வவ்வும்)

நிலைமொழியின் இறுதி எழுத்து ‘ஓ'(க்+ஓ). 
வருமொழியின் முதல் எழுத்து ‘இ’. எனவே 'வ்' இடையில் தோன்றும்
கோ+வ்+இல்=கோவில் 

கவிச்சக்கிரவர்த்தி கம்பன் முதல் பல்வேறு தமிழ் புலவர்களும் சான்றோர்களும் கோயில் என்ற வார்த்தையை தமது பாக்களில் பயன்படுத்திவந்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த வார்த்தை கோயிலாக திரிந்து விட்டது.

இன்றும் பல ஊர்கள் கோவில் என்ற பெயரைத் தாங்கி நிற்கின்றன.
நாகர்கோவில், கோவில்பட்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற