# பரணி இலக்கியம்

முதல் பரணி நூல் கலிங்கத்துப் பரணி

முதலாம் குலோத்துங்கனின் படைத் தளபதி கருணாகரத் தொண்டைமானுக்கும் கலிங்க மன்னன் அனந்தவர்ம சோடகங்கனுக்கும் (அனந்தவர்மன்) நடந்த போர் பற்றிக் கூறுவது கலிங்கத்துப் பரணி

பரணி பாடுவதில் வல்லவர் ஜெயங்கொண்டார்
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும்.
போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.

ஆனை ஆயிரம்  அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி
என்பது இலக்கண விளக்கப் பாட்டியல் நூற்பா.

பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு.

போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.

பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்
"காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே" - திவாகரம்
என்பதால் அறியலாம்.
1     கொப்பத்துப் பரணி
2     கூடல் சங்கமத்துப் பரணி
3     கலிங்கத்துப்பரணி  - சயங்கொண்டார்
4     கலிங்கத்துப் பரணி -  ஒட்டக்கூத்தர்
5     தக்கயாகப் பரணி -    ஒட்டக்கூத்தர்
6     இரணியவதைப் பரணி
7     ஆஞ்ஞவதைப் பரணி  -   தத்துவராயர்
8     மோகவதைப் பரணி  - தத்துவராயர்
9     பாசவதைப் பரணி     - வைத்தியநாத தேசிகர்
10     திருச்செந்தூர்ப் பரணி  -  சீனிப்புலவர்
11     கஞ்சவதைப் பரணி
12     கலைசைச் சிதம்பரேசர் பரணி -    சுப்பிரமணிய முனிவர்
பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற