சார்பெழுத்துகளின் வகைகள்

* சார்பெழுத்துகளின் வகைகள் 
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மைபெற்று விளங்குவதால், அவற்றை முதலெழுத்துகள் என்கிறோம்.

முதலெழுத்துகளைச் சார்ந்துவரும் எழுத்துகளைச் சார்பெழுத்துகள் என்கிறோம். 

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.

ஃ எனும் ஆய்த எழுத்து அஃகேனம் என அழைக்கப்படுகிறது.  இவ்வெழுத்து மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளதால் முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. இஃது உயிரோடும் மெய்யோடும் சேராமல் தனித்தே இருப்பதால், தனிநிலை எனவும் கூறுவர். போர் வீரர்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதத்தில் (கேடயம்) காணப்படும் மூன்று குமிழ்ப்புள்ளிகள்போன்று இருத்தலால் ஆய்தம் எனவும் கூறுவர்.


நால்வகைச் சொற்கள்
1) பெயர்ச்சொல்   2) வினைச்சொல்    3) இடைச்சொல்    4) உரிச்சொல்

அம்மா, அப்பாவுடன் மாநகர் மதுரைக்குச் சென்றோம்.  என் தம்பியும் வந்தான்.
பெயரைக் குறித்து வரும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

(எ.கா) அம்மா, அப்பா, மாநகர் மதுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற