# TNPSC CCSE - IV Exam Science (Botany) study material

தாவரங்களின் சிறப்பு பண்புகள்:
  • பச்சையம் உண்டு. அதனால் தனக்குத் தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது.
  • இவை சுயஜீவி ஊட்டமுறை உடையது.
  • கிளைகள் உடையவை.
  • தாவரங்களின் உடலமைப்பில் வேர், இலை, தண்டு, பூக்கள் போன்ற புறத்தோற்ற அமைப்பு உண்டு.
  • உணர் உறுப்புகள், நரம்பு மண்டலம் இல்லை.
  • கழிவு நீக்க மண்டலம் இல்லை.
  • தண்டு நுனி, வேர் நுனி என்ற வளர் நுனிகளைக் கொண்டவை.
  • தாவரச் செல், செல் சுவரைக் கொண்டது.
  • தாவரச் செல் கணிகங்களைக் கொண்டது. அதில் சில கணிகங்கள் பச்சைய நிறமிகளைக் கொண்டவை.
  • தாவர செல்லின் மையப் பகுதியில் பெரிய வாக்குவோல் இருக்கும்.
  • சென்ட்ரோசோம் கிடையாது.
  • தாவரங்கள் திரவ நிலையில் உணவை எடுத்துக் கொள்ளும். எனவே இது ஹோலோபைடிக் உணவு ஊட்டத்தைக் கொண்டது.
  • தாவரங்களின் பொதுவான உணவு - கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் தாது உப்புகள்.
  •  தாவரங்கள் இடம் விட்டு நகராது.
  •  ஆனால், எளிய வகைத் தாவரங்கள் இடம் விட்டு இடம் நகரும். எ.கா. கிளாமிடாமோனஸ்.
  •  இனப்பெருக்கமானது, உடல் இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பால் இனப்பெருக்கம் வகையைச் சார்ந்தது.
  •  வளர்ச்சியானது மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது.
  •  மொனிரா உலகம், புரோட்டிஸ்டா உலகம், பூஞ்சைகள் உலகம், தாவர உலகம், விலங்கு உலகம் என்று உயிரினங்களை வகைப்படுத்தியவர் - விக்டேக்கர்.
  •  புரோகேரியோட்டுகள், யூகேரியோட்டுகள் என்று செல் அமைப்பை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
புரோகேரியோட்டுகள்
  •  மேம்பாடு அற்ற செல் அமைப்பை பெற்றுள்ளன.
  •  நியூக்ளியஸ் உறையும், நியூக்ளியோலசும் காணப்படுவது இல்லை.
  •  எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்டிரியன்கள், பசுங்கணிகங்கள் மற்றும் வாக்குவோல்கள் காணப்படுவது இல்லை
 யூகேரியோட்டுகள்
  •  மேம்பாடு அடைந்த செல் அமைப்பை கொண்டுள்ளன.
  •  சைட்டோபிளாசா  சவ்வினால் சூழப்பட்ட எண்டோபிளாச வலை, கோல்கை உறுப்புகள், மைட்டோ காண்ட்ரியன்கள், பசுங்கணிகங்கள், வாக்குவோல்கள் காணப்படும்.
  •  இவை புரோகேரியோட்டுகள் செல்களை விட அளவில் பெரியது.
  •  செல்சுவர் பெப்டிடோகிளைக்கன் என்ற மியூக்கோ பெப்டைடால் ஆனது.
  •  செல்லுலோஸ் கிடையாது.
  •  ரைபோசோம்கள் சிறியன. டி.என்.ஏ. குட்டையானது. மைட்டாஸிஸ், மயோசிஸ் வகை செல் பகுப்புகள் காணப்படுவது இல்லை. மாறாக பிளத்தல் வகை செல் பகுப்பு நடைபெறுகின்றது.
  •  கசையிழை ஓர் நுண்ணிழையினால் ஆனது.
  •  5 மைக்ரானை விட பெரிய அளவு செல்களைக் கொண்டவை.
  •  செல்சுவர் செல்லுலோஸினால் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற